வேலூர், அக். 7-
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ‘ரெட் ரன்’ மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஓட்டப்பந்தய போட்டியை மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ‘ரெட் ரன்’ மாரத்தான் போட்டி நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. விஜய் சந்திரன், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply