கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இன்று 1.08.2026 காலை 11.00 மணிக்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஜே.ஜேம்ஸ் தலைமை தாங்கினார்.



மாவட்ட செயலாளர் சி.சிவசாமி காவிரி ஆறு மற்றும் அதன் மீது தமிழக மக்களுக்கான உரிமை குறித்து விளக்கிப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சி.தங்கவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.மௌனசாமி, கே.எம்.செல்வராஜ், மௌ.குணசேகர், வி.ஆர்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல், மற்றும் மாநில குழு உறுப்பினர் கலைஅஸ்வினி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ஏ.அஸ்ரப் அலி, தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.பாலகிருஷ்ணன், கே.வெங்கடாசலம், சயத் இப்ராகிம், கே.சி.மூர்த்தி, சி.ஏ.வேலுசாமி, பி.சுப்ரமணியம், இ.ஏ.பூபதி, கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட செயலாளர் ப.பா.ரமணி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட தலைவர் ஜே.கலா, நிர்மலா மருதகுட்டி, மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், எம்.வி.ராஜன், கோட்டியப்பன், கிழக்கு மண்டல செயலாளர் எஸ்.சண்முகம், மத்திய மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், சூலூர் வே.வசந்தகுமார், தொண்டாமுத்தூர் கணேசமூர்த்தி, காது கேளாதோர் நலச்சங்கம் சுரேஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக் காரர்கள் காவிரியில் தண்ணீர் பெறுவது தமிழகத்தின் பல ஆயிரம் ஆண்டு கால உரிமையாகும். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு காவிரி நீரை நம்பியே உள்ளது.
தொடர்ந்து வறட்சி நிலவுவதாலும் காவேரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் தராமல் மறுத்து வருவதாலும் இந்த மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடகா அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அவ்வாறு அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் முழுமையும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு ஆளாகும்.
எனவே ஒன்றிய அரசு மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதே கோரிக்கைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. காவிரி தமிழகத்தின் உரிமை என்ற முழக்கங்களை எழுப்பினர்.










Leave a Reply