
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் 2வது தேசிய அளவிலான செவன் ஹில்ஸ் நடன விழா கோலாகலம்!வேலூர், ஆக. 2-வேலூர் மாவட்டம், திருமலைக்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில், ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசி மற்றும் அவரது முன்னிலையில், 2வது தேசிய அளவிலான செவன் ஹில்ஸ் நடன விழா கடந்த 2 நாட்களாக யாகம் அரங்கில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீ புரம் வந்த நடன கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், மணிப்பூரி, பெரினி மற்றும் ஒடிசி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய செவ்வியல் நடனங்களை அரங்கேற்றி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இதில் ஸ்ரீபுரம் இயக்குநரும், அறங்காவலருமான டாக்டர் எம். சுரேஷ்பாபு தலைமை வகித்தார். மேலும், ஸ்ரீ சாய் நாட்டியாஞ்சலி நுண்கலை வளர்ச்சி சங்கத்தின் நிறுவனர் டாக்டர் பல்லெம்செட்டி சுரேஷ் மற்றும் விழாவில் பங்கேற்ற நடன கலைஞர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய நடனக் கலைகளை பாதுகாத்து வளர்த்துவரும் பணிக்காக சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டுகளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply