இந்த ஆய்வில், அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவு எடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, மாத இணை உணவு சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை, முட்டை சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை, மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை, உணவுக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள், இணை உணவு வழங்கும் நேரம், முன்பருவ கல்வி நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை முறையாக வழங்கி குழந்தைகளின் எடை அளவுகளை பராமரிப்பதுடன் தொடர்ந்து குழந்தைகளை சிறப்பாக பராமரிக்கவும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, இ.ஆ.ப., தெரிவித்தார்.










Leave a Reply