நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உரிமம் பெறாத கல்குவாரிகள்…

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குவாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள த.வே.க தலைமையிலான தமிழக அரசு சட்ட விரோதமாக இயங்கி வரும் கல் குவாரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் ஆனாலும் சட்ட ஒழுங்கை மீறி உரிமம் பெறாத கல்குவாரிகள் இன்றளவும் செயல்பட்டு வருகிறது குறிப்பாக கோவையில் பல்வேறு குவாரிகளால் மக்களுக்கு பெருமளவு பாதிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது கோவை மயிலேறி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சில அங்கீகரிக்கப்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இதில் ஒரு குவாரி குவாரி சங்கத் தலைவர் சின்னச்சாமி என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது இந்த குவாரி அமைந்திருக்கும் பகுதி மயிலேறி பாளையம் ஊராட்சியில் இருந்து நெகமம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது இந்த சாலையை முற்றிலுமாக ஆக்கிரமித்து தங்கள் வசதிக்கேற்ப குவாரிகளை நடத்தி வருகிறார்கள் இதனால் மக்கள் அந்த நெகமம் தார் சாலையை அடைவதற்கு மாற்றுப்பாதையை உபயோகித்து வருகிறார்கள் சுமார் பல கிலோமீட்டர் தூரம் வரை பயணித்த பின்பே அந்த சாலையை அடைகிறார்கள். சில நிமிடங்களில் நெகமம் சாலையை அடைய அரசு போட்டுக் கொடுத்த சாலையை ஆக்கிரமித்து அந்தப் பகுதி மக்களின் பயண நிமிடங்களை பல மணி நேரங்கள் கடந்து செல்லும் அளவிற்கு இந்த பகுதியை சுற்றி உள்ள குகாரிகள், பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள் மேலும் படிக்க செல்லும் மாணவர்களுக்கு பெரிய இடையூறு உள்ளது என்றும் அதனால் தங்களது படிப்பு பாதிப்புக்கு உள்ளாவதாக மாணவர்கள் கூறுகின்றனர் அதேபோல் கோவையில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள குவாரிகள் தாங்கள் வாங்கி உள்ள உரிமைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாது அருகிலே அமைந்திருக்கும் இடங்களையும் ஆக்கிரமித்து மலைகளை குடைந்து வருமானத்தை ஈட்டி வருகிறார்கள் ஒரு சில இடங்களில் மலைகளுக்கு அருகில் குவாரி உரிமம் பெற்று அந்த மாலையையும் குடைந்து கல் எடுத்து வருகிறார்கள், இதனால் இயற்கை அழியும் அபாயம் அதிகரித்து வருகிறது அதே போல் அதிக அளவில் கற்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் அதிக அளவில் எடையும் ஏற்றி செல்கிறார்கள் கனிமவளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டை தங்களது வசதிக்கேற்ப அந்தந்த குவாரியில் பணி புரியும் ஆட்களை நேரடியாக கனிமவளத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி அவர்களின் வேலை ஆட்களை கொண்டே அரசு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட வேண்டிய ரப்பர் முத்திரையை அனுமதி சீட்டில் அவர்களே அச்சடித்து தங்கள் நிறுவனத்துக்கு எடுத்து செல்கிறார்கள் இதை யார் முறைப்படுத்துவது இது குறித்து சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்பிய பொழுது தற்போது உள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது பலரின் கனவாக உள்ளது அப்படி அவர்கள் சொந்த வீடு கட்டும் பொழுது கல்,மணல்,செங்கல், மற்றும் இதரப் பொருட்களுக்கு அதாவது அவர்களின் சொந்த வீட்டு கனவு நிறைவேற இந்த பொருட்கள் கிடைக்காவிட்டால் எப்படி சொந்த வீடு கட்டுவார்கள் மேலும் அரசுக்கு வருவாய் வர வேண்டும் என்றால் குறையாக சொல்லப்படும் விஷயங்களை குறைத்துக் கொண்டு நிர்வாக வருமானத்தை குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால் தமிழக அரசின் நிதிநிலை என்னவாகும் என்ற கேள்விகளையும் மாவட்ட துறையைச் சார்ந்த மேல் அதிகாரி முன் வைக்கிறார். இத்துறையைச் சார்ந்த அமைச்சர் பிரபு இரவும் பகலமாக கண்காணித்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கூட தொடர்ந்து கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது

____&__

வெள்ளலூர் குப்பை கிடங்கு, இரண்டாவது கிளை வெள்ளலூர் பேரூராட்சியில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் பேரூராட்சியில் குப்பைகள் வெள்ளம் போல் கொட்டப்பட்டு வருகிறது கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை வெள்ளலூர் பேரூராட்சி 2வது வார்டுக்குட்பட்ட கள்ளங்காட்டுப்புதூர்,ஆறுபடை நகர் மக்கள் வசித்து வரும் பகுதியில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதால் அங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளின் துர்நாற்றத்தால் நோய்கள் பரவ நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர் இதே பகுதியில் அருகில் குடியிருக்கும் அந்த வார்டு உறுப்பினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன, பேரூராட்சி தலைவரும்,சுகாதார அலுவலரும், ஊரில் உள்ளார்களா அல்லது வெளிநாடு பயணம் சென்று விட்டார்களா என்ற கேள்விகளை பேரூராட்சி சுற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனையே மக்களுக்கு பெரிய வேதனையை அழித்து வரும் நிலையில் தற்போது வெள்ளனூர் பேரூராட்சி ஒன்றும் விதி வழக்கல்ல சம்மந்தப்பட்ட துறை ரீதியான அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம், இந்த தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சியின் உதவி இயக்குனர் இவர்களின் நடவடிக்கை எப்போது என்று காத்திருக்கும் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது மக்களின் நீண்டகால கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?