அரசு இ பொது சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு! வேலூர் ஜூலை 15-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ சேவை மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அந்த இ சேவை மையத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடம் இந்த இ சேவை மையத்தில் ஏதாவது குறைகள் உள்ளனவா? என்று கேட்டறிந்தார். இந்த திடீர் ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியருடன் வேலூர் வட்டாட்சியர் பழனி, மாவட்ட மின் மேலாளர் அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.