மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நகராட்சிசொந்தமான கழிவறையில் அதிக கட்டணத்தை வசூலித்து வரும் ஒப்பந்ததாரரை கண்டித்து மேட்டுப்பாளையம் தாலுகா சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கினர் .

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி கழிவறையில் விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி மேட்டுப்பாளையம் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தோழர் முஹம்மது அலி ஜின்னா.
அப்துல் சமது.
கனகா மணி.
சாணவாஸ்.
லூயிஸ்ராஜ்.ஆகியோர் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரிடம் நேரில் மனுவை அளித்தனர் மனு பெற்றுக் கொண்டமேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்கள் தங்கள் அளித்த மனு மீது விசாரணை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்