மாநகராட்சி கால்வாய் கட்டும் பணியில் மெத்தனம் காட்பாடி அருப்பு மேட்டில் தட்டிக் கேட்கும் மக்களுக்கு ஆபாச வார்த்தை கொலை மிரட்டல்

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உள்ளடங்கிய ஓடை பிள்ளையார் கோயில் அருகாமில் அருப்புமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மதுபிரியர்கள் வந்து செல்லுகின்றனர். இங்கு கால்வாய் அமைக்கும் பணி ஒப்பந்ததாரர்கள் நினைக்கும் போது செய்து வருவதால் பணிகள் தேக்க நிலையில் உள்ளது. கால்வாய் காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் பாதுகாப்பு இல்லாமல் ரோடுக்கு மேல் இரண்டு அடிக்கு மேல் கம்பிகள் நீண்டு உள்ளது. மேலும் ஜெல்லி கொட்டுற மிஷின் நடு ரோட்டில் வைத்து வேலை செய்வதால் இருசக்கர வாகனத்திலும், நடந்து செல்பவர்களும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு செல்கின்றார்களாம். மேலும் மாணவர்கள் பள்ளிக்குப்போய் வர சிரமப்படுகின்றனர் மேலும் பல்வேறு பணிக்கு செல்பவர்களும் இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது தவிர அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ் ,ஆட்டோகள் கூட போய் வர முடியாது நிலை உள்ளது. இந்தப் பணியை கடந்த திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் பணியை எடுத்து ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டால் அங்கு பணியில் உள்ள ஒப்பந்ததாரர்கள் ஆட்கள் பொதுமக்களை ரவுடியில் போல் வெட்டி விடுவேன் குத்தி விடுவேன் என்றும் போதையில் ஆபாச வார்த்தைகளில் பேசியும் அச்சுறுத்தி வருகின்றார்களாம். இதனால் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர், உதவி ஆணையாளர் ஆகியோர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் பேசினாலும் யாரும் செல்போனை எடுப்பதில்லை என்று மக்கள் தங்கள் வேதனைகளை தெரிவிக்கின்றனர். எனவே மேற்கண்ட கால்வாய் அமைக்கும் பணிகளையும், அடிப்படை தேவைகளையும் மக்கள் நலன் கருதி விரைந்து முடிக்க தவெக மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.