வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வு மனு நாள்!வேலூர், ஜூலை 10-வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.U. சிவராமன் உத்தரவின் பேரில், 08.07.2026-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி (தலைமையிடம்), உதவி காவல் கண்காணிப்பாளர் B.S.தனுஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 45 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.