கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைந்த மூத்த தலைவர் ஜோதி பாசுவின் 112-வது பிறந்தநாளையொட்டி, சி.ஐ.டி.யு. கோவை மாவட்டக் குழு சார்பில் வளர்ச்சி நிதியளிப்பு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தோழர் கே. மனோகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர்கள் தோழர் எஸ். கண்ணன்,
மாவட்டச் செயலாளர்
தோழர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாநில குழு நிர்வாகிகள் ஆர். வேலுசாமி,, பி. சத்யா, மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
கனகராஜ்
கே. ரத்தினகுமார், ஆர். ராஜன், எம். எழுமலை, என். ஜாகீர், ஆர். சரவணன், எம்.கே. முத்துக்குமார், வேலாங்கண்ணி ராஜ், எம். ராஜ்கோபால், ஏ. ஜான் அந்தோணி ராஜ், கே. சந்தோஷ், டி. கோபாலகிருஷ்ணன், சி. துரைசாமி, எம். நவநீதகிருஷ்ணன், என். சிவராஜன், எம். ஆனந்தகுமார், வி. ரம்யா, வி. விஜயராகவன் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள். சாமுவேல். ஹபிபுல்லா சத்யா . உள்ளிட்ட சி ஐ டி யு இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜோதி பாசுவின் அரசியல் வாழ்க்கை, தொழிலாளர் இயக்கத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரப்பட்டது. தொடர்ந்து தொழிற்சங்க வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை விரிவாக்கம், வளர்ச்சி நிதி திரட்டுதல் மற்றும் எதிர்கால அமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும், சி.ஐ.டி.யு. அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.












Leave a Reply