சிறு தாமூர் ஸ்ரீனிவாச அறக்கட்டளை நிர்வகிக்கும்கற்றல் வசதியில் கல்வி திட்ட விழா!


தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ‘கற்றல் வசதியில் கல்வி’ என்னும் திட்டத்தை 2025 ஜூலை மாதம் சிறுதாமூர்
ஸ்ரீனிவாசா அறக்கட்டளை அறிமுகப்படுத்தி இதன் பணியாக கிராமங்களில்
செயல்படும் அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி
ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் உட்காருவதற்கு
பெஞ்சுகளும் எழுதுவதற்கு மேசைகளும் வழங்கிவருகிறது.

வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்த மிகச்சரியான
இருக்கை வசதிகளை வழங்குவதன் மூலம் மாணவர்களின்
உடல்நலனுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கற்கும் திறனை
மேம்படுத்தவும் இயலும் என்பதனால் ‘கற்றல் வசதியுடன் கல்வி’
திட்டத்தை இதன் நிறுவுனர் – தலைவர் கவிஞர்
விஜயகிருஷ்ணன் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். கற்றல் வசதியுடன் கல்வி' திட்டத்தின் கீழ் சென்ற மாதம்வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் ஆறு அரசுப் பள்ளி வகுப்பறைகளுக்குத் தேவையான இருக்கைகள் மற்றும் எழுது மேசைகள்

வழங்கப்பட்டன. 'கற்றல் வசதியுடன் கல்வி' திட்டத்தின் தொடர்பணியாக சிறுதாமூர்

ஸ்ரீனிவாசா அறக்கட்டளை பெருநகரங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள்
மற்றும் கல்லூரிகளைத் தொடர்புகொண்டு அந்நிறுவனங்களில்
பயன்படுத்தப்படாமல் உள்ள அதேநேரம் பயன்படுத்தக்கூடிய இருக்கைகள்
மற்றும் மேசைகளை நன்கொடையாகப் பெற்று அவற்றை சீர்செய்து,
வண்ணம் தீட்டி தேவைப்படும் கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு
வழங்குகின்றது. தளவாடப் போக்குவரத்து மற்றும் புதுப்பித்தல் செலவுகளை
அறக்கட்டளையே ஏற்கிறது. இந்த திட்டத் செயலாக்கம் அரசின் நிதி உதவியின்றி மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மற்றும் சின்மயா வித்யாலயா ஆகியவை
தாங்கள் பயன்படுத்தாத, பயன்படுத்தக்கூடிய இருக்கைகள் மற்றும் எழுது மேசைகளை ‘கற்றல் வசதியுடன்
கல்வி’ திட்ட செயல்பாட்டிற்காக வழங்கியுள்ளது.

இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் கல்வி வட்டாரத்தில் இயங்கும் மதுராந்தகம் வட்டம் வேப்பங்கரணை, அத்திவாக்கம், முருங்கை, மாம்பட்டு, கொங்கரை, மொறப்பக்கம், தின்னாலூர், கீழ் அத்திவாக்கம், களத்தூர் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் எம். வீரப்பன் முதன்மை விருந்தினராக இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான
இருக்கைகளை பள்ளிகளுக்கு வழங்கினார்.

கவிஞர் விஜயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் கமலக்கண்ணன், அச்சிறுப்பாக்கம் ஒன்றியப் பெருந்தலைவர் கண்ணன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கிருஷ்ணா, மணிவண்ணன்,, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன், சிறுதாமூர் பள்ளித் தலைமை ஆசிரியர் மாரியப்பன், ஆசிரியர் பயிற்றுனர், ராஜபாரதி, பள்ளித்தலைமை ஆசிரியர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவவிழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக சிறுதாமூர் பள்ளியில் எட்டாம் வகுப்புத் துவக்கவிழா நடைபெற்றது. சென்னை தாம்பரம் காமதேனு அறக்கட்டளை வழங்கிய நோட்டுப் புத்தகங்கள் நான்கு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.