காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர் கைது!வேலூர், ஜூன் 30-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி பகுதி திமுகவினர் காவல் துறை அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அமைச்சர் பதவி விலக கோரி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி திமுக வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, மாமன்ற உறுப்பினர் டீட்டாசரவணன், பழைய காட்பாடி மோ. திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலையும் ஏற்பட்டது. மாலையில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து திமுகவினரும் விடுவிக்கப்பட்டனர்.
Leave a Reply