காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவ – மாணவிகள் விடுதிகளில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் சினேகா அழைப்பு !காஞ்சிபுரம், ஜூன் 27 -காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல மாணவ – மாணவிகள் விடுதிகளில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சினேகா அழைப்பு விடுத்துள்ளார் .இது குறித்து கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 74 விடுதிகளும், கல்லூரிகளில் மாணவர்களுக்கான 51விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ – மாணவிகள் தங்கிப் படிக்கலாம். கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ – மாணவிகள் அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கலாம்.விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு 4 இணை சீருடைகளும் வழங்கப்படும்.10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET – JEE நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.விடுதிகளில் சேர விரும்பும் மாணவ – மாணவியர்கள்பெற்றோர் – பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தகுதியுடைய மாணவ – மாணவியர் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கலாம்.கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன’. இவ்வாறு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.