லஞ்சம் மாமூல் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் உள்ளடக்கிய 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ், ஐபிஎஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு உள்ளடக்கிய பகுதியில் அரசு அனுமதியுடன் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுப்பவர்களிடம் சுமார் 15,000 ரூபாய் வரை லஞ்சம் மாமூல் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசி, தலைமைக் காவலர்கள் வேல்முருகன், செந்தில்குமார் உள்ளடக்கிய 3 பேர் மீதும் அனுமதியுடன் மண் எடுத்து வரும் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்ட பொது அரசு அனுமதியுடன் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுப்பவர்களிடம் லஞ்ச மாமூல் கேட்டது
குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் கலையரசி, தலைமைக் காவலர்கள் வேல்முருகன், செந்தில்குமார் மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ், ஐபிஎஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனையெடுத்து பெண் காவல் ஆய்வாளர் உள்ளடக்கிய மூவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.










Leave a Reply