திண்டுக்கல்லில் , பிரபல துணிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே , கஞ்சா விற்பனை செய்த நபர் கைது !

திண்டுக்கல் , வரதராஜா காம்ப்ளக்ஸில் உள்ள , பிரபல துணிக்கடையில் , வையம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜ்குமார் (27) என்பவர் , சக ஊழியர்களுக்கும் , மற்றவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகின்றது .

அதனைத் தொடர்ந்து , நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் , R.S.ரோடு பகுதியில் , கையில் கஞ்சா வைத்து செல்போனில் அழைத்து விற்பனை செய்த அந்த மேற்படி நபரை கைது செய்தனர் .