கணியம்பாடியில் தவெக நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!வேலூர்,மே 26-வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் சமரசம் அடையாத செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ,பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில கோட்டாட்சியரிடம் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கணியம்பாடி பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், திடீர் பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.