திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் திப்பு சுல்தான் ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் நந்தினி தேவி தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தத்தில் ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜேஷ் என்பவர் இருசக்கர (ஸ்கூட்டி) வாகனத்தில் சீட்டிற்கு கீழ் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆம்பூர் மற்றும் பாங்கிஷாப் பகுதிகளில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் ஆந்திர மாநிலத்தில் கஞ்சா சப்ளை செய்வது யார்? மேலும் யார் யார் இதில் தொடர்பு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










Leave a Reply