வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் திடீர் ஆய்வு!
வேலூர், மே 20-
வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் உள்ள கட்டமைப்பு வசதிகள், வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எத்தனை பேர்? அவர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன, எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் அவரது ஆய்வு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் புகார் கொடுக்கும் வகையில் உங்களது பணி இருக்கக்கூடாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.












Leave a Reply