

பவர் நியூஸ் - வின்எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ஜி. கண்ணனின் மாமியாரும், ஜி. பானுவின் தாயாருமாகிய சை.சுன்னாபேகம் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி காலாமானர். அவர் சிறந்த இல்லத்தரசியாக வாழ்ந்ததோடு மட்டுமின்றி விருந்தோம்பலின் முகமாகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்று அவரது சுற்றத்தினர் பெருமை பொங்க குறிப்பிடுகின்றனர். தான் சார்ந்து இருக்கிற இஸ்லாம் மதம் சார்புடையவராக மட்டும் வாழ்க்கையை நகர்த்தாமல், தன் மகள்கள் வேறு மதத்தவரை கலப்பு மணம் செய்தாலும் அதை மனம் கோணாமல் ஏற்றதுடன் சிறந்த இல்லத்தரசியாய் அவர்கள் தம் குடும்பத்தினருடன் தான் சமைத்த உணவுகளை அவ்வப்போது கொடுத்து அனுப்பி, சில நேரங்களில் பரிமாறியும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கி இருக்கிறார். அவர் மறைந்து வரும் மே மாதம் 18-ஆம் தேதியுடன் 40 நாட்கள் ஆகின்றது. அதனை நினைவு கூறும் வகையில் சை. சுன்னாபேகம் குடும்பத்தினர் குரும்ப பாளையத்தில் உள்ள யுனைடெட் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாற உள்ளனர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கவும் உள்ளனர்.










Leave a Reply