
கால்நடை மருத்துவமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிப்பு!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, எர்த்தாங்கல் ஏரியான் பட்டி கிராமத்தைச் சுற்றி 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது: அந்த கிராமத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆடு, மாடு கோழி மற்றும் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். இந்த மக்கள் கூலித் தொழில், விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு கால்நடை மருத்துவமனை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் எங்கள் பகுதிக்கு கால்நடை மருத்துவமனை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனு மீது விசாரணை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.










Leave a Reply