கோவையில்சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள் பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்.

கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான திரு. C.K. கண்ணன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எங்கள் வின்னர்ஸ் இந்தியா குழுமங்கள் சார்பிலும், எங்கள் தந்தையின் நினைவு அறக்கட்டளை சார்பிலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.எங்களது பிரதான தொழில் ரியல் எஸ்டேட் என்பதால் அது சம்பந்தமான ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு வீட்டுமனைகளை பரிசாக தந்துள்ளோம். இது தவிர சிறப்பாக செயல்படும் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்த மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பெயரில் வீட்டு மனைகளை இலவசமாக கிரயம் செய்து தந்துள்ளோம். மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் இலவச வீட்டுமனைகளை வழங்கி உள்ளோம். இதுதவிர ரேக்ளா போட்டியில் முதலிடம் பெறும் வீரருக்கும் வீட்டுமனைகளை வழங்கி வருகிறோம். அனைத்து வசதிகளையும் கொண்ட எங்கள் லே-அவுட்டுகளில் நாங்கள் இலவசமாக கொடுத்த வீட்டு மனைகளில் இன்று ஏராளமானோர் வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இதுதவிர சின்னாம்பதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ஐந்து சென்ட் இடம் தானமாக கொடுத்து உள்ளோம். தற்போது அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது. இதேபோல் எட்டிமடையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு 5 சென்ட் இடம் வழங்கி இருக்கிறோம். மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அடிவாரத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியும், கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில் இரண்டு இடங்களில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும், மலையின் மேல் பகுதியில் கோவில் கருவறைமுன் மண்டபமும் கட்டிக் கொடுத்து உள்ளோம்.சின்னாம்பதியில் உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியை தத்து எடுத்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தக பைகள், நோட்டு புத்தகங்கள், பேனா-பென்சில் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். இன்று நடந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்குகள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாள் அன்று சின்னாம்பதி, புதுப்பதியை சேர்ந்த பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து தைத்திருநாளை கொண்டாடுவதுடன் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி சமபந்தி விருந்தும் நடத்தி வருகிறோம். எல்லை மாகாளியம்மன் கோவிலில் தினமும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.
மேலும் எங்கள் வின்னர்ஸ் குழுமம் சார்பில் வாளையார் அருகே தமிழக எல்லையில் உள்ள சின்னாம்பதியில் எங்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தில் 25 ஏக்கரில் இயற்கை எழில் கொஞ்கம் இடத்தில் வின்னர்ஸ் ஹில் ரிசார்ட்ஸ் என்ற பெயரில் புதிய கோடை வாசல் ஸ்தலத்தை உருவாக்கி இருக்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எங்கள் ரிசார்ட்டில் கொடைக்கானல், ஊட்டியை போல குளிர்ச்சியான கால நிலை இருக்கும். இந்த பகுதியில் ரம்மியமான சூழ்நிலையில் ஓடும் ஆற்றின் அழகு மனதை கொள்ளை கொள்ளும்,இதுதவிர எங்கள் ரிசார்ட்டில் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான நீச்சல் குளம் அமைந்து உள்ளது. மேலும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு மற்றும் த்ரில்லிங் விளையாட்டுகளும் இடம்பெற்று உள்ளது. லண்டன் ப்ரிஜ், ஆப் ரோடு த்ரில்லிங் ஜீப் ரெய்டு, ஹார்ஸ் ரெய்டு, ஓபன் தியேட்டர் மற்றும் கிரிக்கெட் புட்பால், வாலிபால், டென்னிஸ், ஷட்டில் கார்க் கிரவுண்ட்களும் உள்ளன. 2000 பேர் அமரும் வகையிலான திறந்த வெளி புல்தரையிலான அரங்கும் அமைந்து உள்ளது. காடு-மலைகளின் இயற்கை அழகை ரசிக்க பிரத்யேக கோபுரமும் (வ) அமைக்கப்பட்டு உள்ளது. செட்டிநாட்டு கலை அம்சத்துடன் கூடிய தங்கும் விடுதிகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு இணையான தங்கும் அறைகளும் இடம்பெற்று உள்ளது. எங்கள் ரிசார்ட் கோவை உக்கடத்தில் இருந்து 25 நிமிட பயண தூரத்தில் மட்டுமே அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு C.K.கண்ணன் அவர்கள் கூறினார்.