
வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்கும் பணியை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்!வேலூர், மே 3 -வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, வார்டு 9 -காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளை உரமாக்கும் பணியை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் செல்லும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வாங்குகின்றனரா? என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து குப்பைகளையும் ஒரே கலவையாக வழங்கிய இல்லத்தரசிகளுக்கு சில அறிவுரைகளை சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து இல்லந்தோறும் வாங்க வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கும் சில அறிவுரைகளை அப்போது அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply