அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய 2 தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 23.04.2026 அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக தனி அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி எதிர்வரும் 04.05.2026 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தபால் வாக்கு எண்ணிக்கை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை மேசைகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தடையில்லா மின்சார சேவை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளையும் தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.










Leave a Reply