இன்றும், நாளையும் கணக்கும் இனிக்கும் – கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா 2026!வேலூர், ஏப். 25-6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் இன்று 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசுகிறார். நிகழ்வுகளை மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி ஒருங்கிணைத்து பேசுகிறார்.மாவட்ட துணைத்தலைவர்கள் பேராசிரியர் டி.சசிகலா, சா.குமரன், வீரா.குமரன், இணை செயலாளர்கள் என்.கோட்டீஸ்வரி பி.சுகுமாறன் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.திருநாவுக்கரசு குழந்தைகள் கணிதத் திருவிழாவை தொடக்க வைத்து சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் விழியன், மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.பே.அமுதா, அறிவியல் வெளியீடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.வேலூர் யுனியன் வங்கி கிளையின் முதமை மேலாளர் ராஜேஸ்கண்ணா, அறிவுத்தத்தின் இணை நிறுவனர் எஸ்.குணசுந்தரி, மேலாளர் எம்.சதீஷ், வேளாண் பயிற்சியாளர் மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் பா.ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.இரண்டு நாள் பயிற்சி முகாமில் அறிவுத்தோட்டம் சுற்றும் நடைப்பயணம், கண்களை மடி அமர்வு, குழுச் செயல்பாடுகள், அளவீடு குறித்த கலந்துரையாடல், கணிதப் பேச்சு, கணிதக்கதை தென்னை இலையில் கைவினை, டாங்கிராம் மந்திரம், புத்தக வெளியீடு, கணித பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்ற நிர்வாககுழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Leave a Reply