தேவரிஷிக்குப்பத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த ராணுவ வீரரிடம் தபால் ஒட்டு சேகரிப்பு!

வேலூர்,ஏப்.14-
வேலூர் மாவட்டம்,
கே.வி.குப்பம் தனி தொகுதி பகுதியான தேவரிஷிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைசாமியின்(97)
வீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் ஓட்டு
சேகரித்தனர்.