வேலூர்,ஏப்.12-
குடியாத்தம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ளார் பரிதா புருஷோத்தமன். இவர் அவ்வப்போது நூதன முறையில் வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு குடியாத்தத்தில் தென்குளக்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட வயதானவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளம் பெண்கள் ,இல்லத்தரசிகள் ஆகியோரிடம் வாக்குகளை நடந்து சென்றறே சேகரித்தார் அதிமுக வேட்பாளர் பரிதா. இந்நிலையில் இந்த நடைபயிற்சி சென்றவர்களிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் பரிதா. இதை தொடர்ந்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதிக்கு நேரில் சென்றார் .அங்கே கடை வைத்துள்ள வணிகர்களிடம் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு தங்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்தார். இதை தொடர்ந்து காய்கனி வாங்குவதற்கு உழவர் சந்தைக்கு வருகை புரிந்த நுகர்வோரிடமும் தனது வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார் பரிதா. அப்போது நுகர்வோருக்கு தேவைப்பட்ட காய் கனிகளை தானே எடை போட்டு வழங்கி நூதன தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பரிதா. இப்படி காண்போரை கவர்ந்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளார் பரிதா என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. குடியாத்தம் தொகுதியில் தற்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் நாளுக்கு நாள் முன்னணியில் சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியாத்தம் தனி தொகுதியில அதிமுக வேட்பாளர் பரிதாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பது நிதர்சன உண்மை. இந்த வாக்கு சேகரிப்பின் போது குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே. கே. என். பழனி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் பரிதாவுடன் உடன் சென்றனர்.












Leave a Reply