காட்பாடி செங்குட்டை சி.எம்.ஜான் தெருவில் பாஜகவினர் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு!

வேலூர், ஏப். 10-
காட்பாடி நகர் வடக்கு மண்டல் வார்டு எண்.4 செங்குட்டை சக்தி கேந்திரம் பூத் எண்.220  சி. எம்.ஜான் தெரு, 1,2,3, குறுக்கு தெரு  பகுதியில் பாஜகவினர் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி. ராமுவுக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் மாவட்ட செயலாளர் (ஊடக பிரிவு) மற்றும் BLA-2  எம்.தட்சிணாமூர்த்தி, கிளை தலைவர்  ஏ. ஜி.பிரகாஷ் குமார், BLA-2 R.லட்சுமணன், காட்பாடி செங்குட்டை மாடு விடும் வீதி கமலவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாக்காளர்கள் ஆவலுடன் துண்டு பிரசுரங்களை பாஜகவினரிடம் வாங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.