காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் வேலூர் தொகுதி எம்.பி .கதிர் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் நீல.சந்திரகுமார், முன்னாள் வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.