வேலூர், ஏப். 6 –
குடியாத்தம் தனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஜி.பரிதா புருஷோத்தமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகத்தை சென்னைக்கு சென்று அவரை நேரில் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் பரிதா ஆசி பெற்றார். அப்போது தனக்கு குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சி நிர்வாகிகள், தோழர்கள் தனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய தனக்கு உதவுமாறு புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு ஏ.சி.சண்முகம் தங்களது புதிய நீதி கட்சி சார்பில் பெருவாரியான வாக்குகளை இரட்டை இலைக்கு வழங்குவதாகவும், இரட்டை இலை சின்னம் அமோக வெற்றி பெற தான் புதிய நீதி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தர விடுவதாகவும் அவர் உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து குடியாத்தம் தனி தொகுதியின் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமனுக்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து மகிழ்ந்தார் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த அரிய நிகழ்வின் போது குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே. கே. என். பழனி, அதிமுக பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் பொகலூர் பிரபாகரன், குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சி செயலாளர், கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ். பி .நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி செயலாளர், கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதியநீதி கட்சியின் நிறுவன தலைவர் ஏ .சி.சண்முகத்தை சந்தித்து விட்டு வந்த குடியாத்தம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பரிதா தனது வெற்றி உறுதியாகிவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply