வரலாற்று மலரும் வெளியிடப்பட்டது !

காஞ்சிபுரம், ஏப். 3 – காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பரின் 232வது நினைவேந்தல் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஆடவர் கல்லூரியில் வெகு விமர்சியாக நடந்தது. கொடை வள்ளல் பச்சையப்பரின் வரலாறு மலரும் வெளியிடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர்
வ.அண்ணாதுரை கொடை வள்ளல் பச்சையப்பரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, கொடை வள்ளல் பச்சையப்பரின் வரலாற்று மலரும் வெளியிடப் பட்டது. கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்
வி.எஸ்.ராஜேந்திரன் தலைவர்
கே.இ.எஸ்.சுந்தர்
ராஜன், செயலாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இறுதியில் கல்லூரியின் சார்பிலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பிலும் பொது மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.










Leave a Reply