ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீட பீடாதிபதியின் 47 வது ஜெயந்தி விழா!

வேலூர், மார்ச் 29-
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகரம், பலவன் சாத்துக்குப்பம் மலையடிவாரத்தில் ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீடத்தின் பீடாதிபதியின் 47வது ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. இந்த விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீடத்தின் கதவுகள் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவரது 47 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது, இந்த 47 வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தரை தரிசித்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12:00 மணி அளவில் அறுசுவை உணவு விருந்தாக பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீட தீவிர பக்தர்கள் செய்திருந்தனர்.