காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு ஆட்டிறைச்சி கடையில் நூதன முறையில் பிரச்சாரம்!

வேலூர், மார்ச் 30-
காட்பாடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் பொறியாளர் வி. ராமு  காட்பாடி செங்குட்டை பகுதியில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் அங்காடியில் ஆட்டிறைச்சியை தனது கரங்களால் வெட்டி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து பிரச்சாரத்தை நூதன முறையில் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் ராமுவுடன் அதிமுக முன்னாள் கவுன்சிலர் குமார் தலைமையில், செங்குட்டை பகுதி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள திரண்டு வந்து அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.