செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா !

செய்யாறு, மார்ச் 28 –
செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு  மாவட்ட அளவிலான சான்றிதழ் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடந்தது.
இந்தோ அமெரிக்கன் பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் சங்க மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும்
ஆலோசகர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இந்தோ அமெரிக்கன் பள்ளி  முதல்வர்
அ.ப.சையத் அப்துல் இலியாஸ்
தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர்  மு.அஞ்சுகம்  வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு
மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்முருகன் கலந்து கொண்டு, பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும், ஜூனியர் ரெட் கிராஸ் சங்க மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து மாணவ –  மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர்  க.கோவேந்திரன் செய்திருந்தார். ஆலோசகர் ஜெயந்தி நன்றி கூறினார்.