செய்யாறில் நிறைவடைந்த கிராமப்புற சாலைகளை நேரில் கள ஆய்வு செய்த கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி!செய்யாறு, மார்ச் 28 -செய்யாறு நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட மெயின் சாலைகளுடன் இணைக்கும் நிறைவடைந்த கிராமப்புற சாலைகளை, கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி தொழில்நுட்ப கருவி மூலம் நேரில் கள ஆய்வு செய்தார்.

செய்யாறு நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட மெயின் சாலைகளுடன் கிராம சாலைகளை இணைக்கும் சாலைகள் புதுப்பிக்க வேண்டும் என, கிராம மக்களும் – வாகன ஒட்டிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் பாப்பாந்தாங்கல் – சுமங்கலி சாலை, ராந்தம் – வளவனூர் சாலை, புதுப்பாடி – வடஇலுப்பை, அப்துல்லாபுரம் – மோரணம், மாமண்டூர் – சுருட்டல் ஆகிய 5 சாலை பணிகளும் நிறைவடைந்தது.‌
இந்தப் பணிகள் எவ்வாறு முடிக்கப்பட்டுள்ளது என்று திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்.‌ ‘கோர்’ என்ற நவீன இயந்திர கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நவீன இயந்திரம், சாலை எத்தனை ‘கன’ அடியில் போடப்பட்டுள்ளது என, துல்லியமாக காட்டக் கூடியவை. இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.