வேலூர், மார்ச் 27-
வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரசமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே, காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படை (FST C II) குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்தனர். சோதனையில், காரில் வந்த வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (21) என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூபாய் 1,35,250/- வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், அதனைப் பாதுகாப்பாக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டாம் என அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply