மின்வாரிய அலுவலர்கள் சார்பு தன்னிலை விளக்கம்!


“விதிகளை மீறி
மின் மாற்றி அமைப்பு! உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை”, என்னும் தலைப்பில் சமீபத்தில் வின் எக்ஸ்பிரஸ் சேனலில் தகவல் வெளிவந்திருந்தது யாவரும் அறிந்ததே!
இந்தச் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று சம்பந்தப்பட்ட செய்தியில் குற்றம் சாட்டப்பட்ட மின் வாரிய அலுவலர்கள் சார்பில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்..
அதனை நம் வாசகர் பார்வைக்கு இங்கே பதிவிடுகிறோம்….
கோவை மையக் கோட்டம் லாலி ரோடு பிரிவு அலுவலகம் ஆர். எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோடு மேற்குப் பகுதியில் கட்டுமான பணிகள் முடியாத நிலையில் விதிகளை மீறி மின்மாற்றி அமைத்து மின் இணைப்பு வழங்கியதாக தங்களது இணையதளத்தில் செய்து வெளியிட்டிருந்தீர்கள். தாங்கள் குறிப்பிட்ட அந்தக் கட்டிடம் கோவை மாநகராட்சியில் முறையான கட்டிட அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் திட்ட குழுமத்தில்( எல்பி ஏ) கட்டிட நிறைவு சான்றிதழ் முறையாக பெற்றுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மின்மாற்றி அமைத்து மின் இணைப்பு பெற அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து மின் வாரியத்தில் அதிகாரிகள் செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்து மின்விதிகளுக்கு உட்பட்டு மின்மாற்றி அமைத்து மின்இணைப்பு வழங்கி உள்ளார்கள். எந்தவிதமான விதிகளையும் மீறி அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்பது உண்மையாகும். நிலைமை இவ்வாறு இருக்க சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நடமாடும் சிலர் சில அதிகாரிகளின் உடந்தையுடன் இதுபோன்ற உண்மைக்கு மாறான செய்திகளை தங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு தவறான செய்திகளை பரப்பி மின்வாரிய அதிகாரிகளுக்கு அவப்பெயரையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் பத்திரிகை தர்மப்படி செய்திக்கான ஆதாரத்தினை பெற்றுக்கொண்டு வெளியிடுமாறும், அதே வேளை காழ்ப்புணர்ச்சியோடு தங்களுக்கு செய்தி வழங்கிய சமூக ஆர்லவலர்மீது மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தங்கள் ஊடக வாயிலாக கோரிக்கை விடுக்கிறோம்.. இவ்வாறு அந்த தன்னிலை விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.










Leave a Reply