காலந்தோறும் கார்ல் மார்க்ஸ்!

நினைவு கூறப்படுவார்!


ஜனநாயகம் என்பது சமூக உடைமைக்
கான பாதையாகக்தான் இருக்க முடியும்!

கடந்த நூற்றாண்டுகளில் தோன்றிய தலைசிறந்த தத்துவ ஞானிகளில் கார்ல் மார்க்ஸ் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். மற்றவர்கள் எல்லாம் உலகத்தை பற்றிய விளக்கங்களை மட்டுமே தந்திருந்தார்கள் ; மார்க்ஸ் ஒருவரே இந்த உலகத்தை எப்படி மாற்றி அமைப்பது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியும் பொதுவுடைமை இயக்கத்தின் தந்தையு
மான கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிக்கான”கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” மற்றும் “மூலதனம்” போன்ற சமூக வரலாற்று சிறப்புமிக்க நூவ்களை படைத்து தந்துள்ளார்.

அவரது சிந்தனைகளே ரஷ்யப் புரட்சி இயக்கத்தை முன்னின்று வழிநடத்திய லெனினிக்கும் சோசலிச சோவியத் அரசை பாதுகாத்த ஸ்டாலினிக்கும்
உறுதுணையாக இருந்தது.சீன, கியூப, வியட்நாமிய, கொரிய நாடுகளின் பொதுவுடைமைக்கான படிப்பினை களை தந்திட்டது.

அவரது செம்மாந்த சிவப்பு சிந்தாந்தங் களே இன்றும் உலகெங்கிலும் உள்ள சமூகநீதி மற்றும் தொழிலாளர் போரா ட்டங்களுக்கான உத்வேக சக்தியாக திகழ்ந்து வருகின்றன. எனவே இரு நூற்றாண்டை கடந்தும் காலந்தோறும் கார்ல் மார்க்ஸ் தேவைப்படுப வராக இருகிறார்.

அதன் சிறப்பை உணர்த்தும் விதமாக தமிழகத்தின் தலைநகர் சென்னையின்
கன்னிமாரா பொதுநூலக வளாகத்தின் முன்பகுதியில் கார்ல் மார்க்ஸின் முழு உருவச்சிலை தமிழக அரசால் அமைக்க ப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது.

“நல்ல குறிக்கோளை அடைவதற்காக. தொடர்ந்து முயலும் மனிதனின் செயல் பாடே பிற்காலத்தில் அளைவரும் படிக்
கும் வரலாறாக மாறுகிறது” எனும் மார்
க்ஸின் வார்த்தைகளின் உயிர்ப்பு சக்தியை இங்கு அன்னாரின் 143வது நினைவேந்தல் நாளில் நினைவு கூறத்
தக்கதாக இருக்கிறது.

மூலதனம் உருவாவதற்கு முன்பே ஆதி மூலதன திரட்டல் படையெடுப்பால் கொலை கொள்ளைகளால் நடந்தது. இத்தகைய வரலாற்றின் வன்முறையே
மூலதனத்தின் தாயாக இருந்திருக் கிறது என்பதை நிறுவுகிறார் மார்க்ஸ்.

இன்றைய ஈரான் போர் உட்பட. முதலா ளித்துவ ஏகாதிபத்தியம் நடத்தியுள்ள எல்லாப் போர்களும் இந்த ஆதி மூல தன திரட்டலின் நவீன வடிவங்களே.

இராக் லிபியா ஆப்கானிஸ்தான் பாலஸ்தீன போர்களுக்குப் பின்னால் ஜனநாயக பாதுகாப்பு பயங்கரவாத ஒழிப்பு என்று பலவிதமான முகமூடிகள்
முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் அணிவிக்கப்படுகின்றன. ஆனால் அடி ப்படை நோக்கம் என்பது எண்ணெய் வளம், தாதுப்பொருட்கள் வளம், நிலம் மற்றும் சந்தையை கைப்பற்றுதல் எனும் ஒரேநோக்கம் மட்டும்தான் .

இதழாளர் இசைக்கும் மணி