திமுகவிடம் விலை போன வேலூர் கிழக்கு மாவட்ட தவெகசெயலாளர்!

வேலூர், மார்ச் 21-
தமிழகத்தில் தற்போது 2026 சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ளது. இதனால் அந்தந்த கட்சி தலைமைகள் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நேர்காணலும் நடந்து வருகிறது. சில கட்சிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்தே தேர்தல் பணியில் இறங்கி பணியாற்ற தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நடக்கும் அண்டர் கிரவுண்ட் வேலைகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இதற்கு காரணம் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருப்பவர் ஏ. நவீன். இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் வந்து குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவெக மாநில தலைவர் விஜய் தொடங்கியுள்ள தவெகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் திமுகவினரிடம் விலை போனதாக கிழக்கு மாவட்டத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. இதையே தவெக கட்சியில் உள்ளவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த கூற்றினையே பெரிதுபடுத்தி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவெக கட்சி தலைமைக்கும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கின்றனர் ஒரு பிரிவினர். டம்மி வேட்பாளர்களை களம் இறக்கி விட்டு விட்டு கணிசமான தொகையை சுருட்டிக் கொள்ள வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ. நவீன் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது, கூறப்படுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக இவரது அக்காவின் கணவர் ஃபெலிக்ஸ் என்பவரின் உதவியால், தயவால் ரூபாய் 80 லட்சத்தில் காட்பாடி காந்திநகர் பகுதியில் வீடு ஒன்றை இவர் சொந்தமாக வாங்கிக் கொண்டதாக பொதுமக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் தரப்பிலும் கூறப்படுகிறது. ஆனால் இந்த வீட்டை யார் பெயரில் வாங்கினார் என்பது மட்டும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய மாவட்ட செயலாளரே திமுகவிடம் விலை போனது வெட்கத்திலும் வெட்கமாக இருப்பதாக தவெகவினர் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள்  தரப்பிலும், நடுநிலையாளர்கள் தரப்பிலும் பேசு பொருளாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யாமல், டம்மியாக தோல்வியை தழுவக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்து, தலைமையை ஏமாற்றி தந்திரமாக காய் நகர்த்தி இவர் பணத்தை வாரி சுருட்டிக் கொள்ள பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது கூறப்படுவது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் கட்சிக்கு உழைத்த தவெகவினர். காட்பாடி மற்றும் கே. வி. குப்பம் (தனி) தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளவர்கள் தொகுதியில் உள்ள பொதுமக்களிடம்
நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து தேர்தல் களத்தில் தவெக நிறுத்தினால் வெற்றிக் கனியை கண்டிப்பாக தவெக பறிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தேவையற்ற நபர்களை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் சொல்லும் பேச்சைக் கேட்டு வேட்பாளர்களாக களம் இறக்கினால் வெற்றி வாய்ப்பை நழுவ விடுமா? அல்லது சுதாரித்து கொண்டு தன்னகத்தே வைத்துக் கொண்டு வெற்றிக் கனியை தட்டிப் பறிக்குமா? என்பதையும் வேட்பாளர் தேர்வில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த அரசியல் உற்றுநோக்கர்களும், சமூக ஆர்வலர்களும். வேட்பாளர் தேர்வு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும். தவெக தலைமை எடுக்கும் முடிவு இறுதியாக இருக்கும். அதுவரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.