கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு பகுதியில் அங்குள்ள பகுதி வாழ் மக்களுக்கு துர்நாற்றங்களை ஏற்படுத்தி பல நோய்கள் உருவாக காரணமாக இருந்து வருகிறது..கடந்த ஆட்சியில் இங்கே வெளியூர் பேருந்து நிலையம் உருவாக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது ,தற்போது வரை ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கு குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றங்கள் முற்றிலும் அகற்றப்பட்டிருக்கும் ஆனால் அத்திட்டும் அறவே தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவினரால் நிறைவேற்றப்படவில்லை திரும்பவும் நாற்றத்திற்குள் வசிக்கும் நிலைமை உருவாகியுள்ளது அது சமயம் தற்போது கோவை மாநகராட்சியில் குப்பை கழிவுகளை பயன்படுத்தி waste to energy என்ற பெயரில் சமையல் எரிவாயு உருவாக்க புதிதாக ஒரு திட்டம் உருவாக்கியுள்ளனர் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த குறைகள் மற்றும் நோய்கள் உருவாகும் சூழ்நிலைகள் வந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் அதே வேலையில் தேசிய தீர்ப்பாயம் 2018 ஆண்டு வழங்கிய உத்தரவின்படி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி அந்த இடத்தை மக்கள் பயன் பெறும் விதமாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது மேலும் இந்நகராட்சியின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதியைச் சார்ந்த ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாவார்கள் இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட கோவை மாநகராட்சி துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.














Leave a Reply