சார்பதிவாளர் அலுவலக சர்ச்சை!_____________நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! கதையாய்சிடி இல்லாதுஇருப்பதாய், மற்றும் பதிவேட்டின் நகல்கள் இணைக்கப்பட்டதாக இணைக்காமலும், கடிதத்தின் உள்பகுதியில்31/1/2026 ம் தேதி கடிதம் அனுப்பியதாக ஆனால் கடிதம் அனுப்பப்பட்டமுத்திரை 14/3/2026 ஆக உள்ளபதில்!

சமூக ஆர்வலர் போர்க்கொடி!


கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் என்பவர் சூலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சில தகவல்களை,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கேட்டு பதில் கிடைக்காமல், மேல்முறையீட்டு அலுவலருக்கு முறையீடு செய்து மீண்டும் 20 நாட்கள் கழித்து சூலூர் சார் பதிவாளர், பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் சிசிடிவி கேமரா உடைய பதிவுகள் கருத்துருக்கள், கடிதத்தில் இணைத்து அனுப்பி வைத்துள்ளதாகவும், பதிவேட்டின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். கடிதத்தின் பக்கங்கள் மட்டும்தான் ஏழு வந்ததே தவிர எந்த குறுந்தகடும் (சிடி-யும்), பதிவேட்டின் நகல்கள் அதில் இணைக்கப்படவில்லை. இணைக்கப்படாத குறுந்தகடை, மற்றும் பதிவேட்டின் நகல்களை சூலூர் சார் பதிவாளர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் உண்மைக்கு மாறான செய்தியை அனுப்பியுள்ளார். இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம்.

ஒரு அரசு அலுவலகத்தில் பொதுத் தகவல் அலுவலராக இருந்து கொண்டு, ஒரு மனுதாரரை ஏமாற்றும் செயலை, திட்டமிட்டு பொதுத் தகவல் அலுவலர் செய்துள்ளார். இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம். அதனால் குறுந்தகடு, மற்றும் பதிவேட்டின் நகல்கள், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள் என்று தன்னுடைய தில்லுமுல்லு வேலைகளை பொதுத் தகவல் அலுவலர் மிகப்பெரிய அளவில் செய்துள்ளார் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன். ஆதலால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிசிடிவி கேமராவில் உள்ள உண்மைச் செய்திகளை குறுந்தகடில், மற்றும் பதிவேட்டின் நகல்களை உண்மைப் பதிவுகளை கொடுக்க வேண்டும். அந்த உண்மைப் பதிவுகளையும் பொய்யான முறையில் அழித்து அனுப்பப்பட்டால், தங்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும்! என்பதையும் இந்த ஆட்சேபனை கடிதம் மூலம் சூலூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு மேற்குறிப்பிட்ட சமூக ஆர்வலர் கடிதம் அனுப்பியுள்ளார்.