அறுந்து விழுந்த மின்கம்பி!உடனடி ஆக்சன்!

ஈச்சனாரி
மின்வாரிய
அதிகாரிகள்
ஊழியர்களுக்கு நன்றி  கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகில் உள்ள கற்பவள நகர் பகுதியில் திடீர் காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின் கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக ஈச்சனாரி மின்வாரிய அலுவலக அதிகாரிக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் 10 நிமிடங்களில கர்ப்பவள நகர் குடியிருப்பு பகுதிக்கு மின் ஊழியர்களை அனுப்பி இரவோடு இரவாக மின்வினியோகம் செய்தார்கள். மின்சார ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கற்பவளநகர் குடியிருப்பு வசிக்கும் பொது மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.