நடவடிக்கை எடுக்க
மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை!



கோவை மாவட்டம் சூலூர் சார்பதிவாளர் அலுவலகம் கலங்கல் சாலையிலிருந்து, தற்போது பழைய கட்டிடமான திருச்சி சாலையில் உள்ள கட்டிடத்தில் சூலூர் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக திறக்கப்பட்டது, மேலும் சார்பதிவாளர் அலுவலகம் கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டிடப் பணிகள் நடந்து வந்தது. தற்போது புதிதாக அலுவலகம் திறந்த பின்பு அலுவலகத்தின் முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு மரத்தை வெட்டி கூறு போட்டுள்ளார்கள். இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம். ஒரு அரசு அலுவலராக இருக்கக்கூடியவர்கள் அலுவலகத்திற்கு முன்பாக இருந்த மிகப்பெரிய மரத்தினை வெட்டி உள்ளார்கள். இந்த மரத்தை வெட்டுவதற்கு எந்த ஒரு அனுமதியும் பெறாமல் வெட்டப்பட்டதாக பொதுமக்கள் கூறி வருகிறார்கள். ஆதலால் ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளுக்கு மேலாக வைத்து பராமரிக்க வேண்டும். அந்த செயல்பாடுகளையும் சூலூர் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படுத்தவில்லை. ஆதலால் முழுக்க முழுக்க அவர்கள் குறி பத்திரத்திலும் பணத்திலும் உள்ளது. ஒரு மரத்தினை வெட்டுவதற்கு அரசு அனுமதி இல்லாமல் வெட்டிய அரசு அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூலூர் வாழ் பொதுமக்கள் சார்பாகவும், வீர இந்து சேவா சார்பாகவும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply