அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ‘ஆளுயர சாக்லேட் மாலை’செய்யாறு தி.மு.க., பொறுப்பாளர்கள் அணிவிப்பு!

செய்யாறு, மார்ச் 17 –
அமைச்சர் எ.வ.வேலு பிறந்தநாளையொட்டி செய்யாறைச் சேர்ந்த தி.மு.க.,  பொறுப்பாளர்கள்  அமைச்சருக்கு ‘ஆளுயர சாக்லேட் மாலையை’ அணிவித்து, பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் ஏழாச்சேரி
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோரது ஏற்பாட்டில் ‘ஆளுயர சாக்லேட் மாலை’ மற்றும் பெரியாரின் திருவுருவச் சிலையை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் லோகநாதன், செய்யாறு நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் கலைஞர் பாஸ்கரன், இளைஞர் அணியைச் சேர்ந்த பொறுப்பாளர் பிரபு மற்றும் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.