வேலூர் தீர்த்தகிரி ஸ்ரீவடிவேல் சுப்பிரமணியர் கோயிலில் பக்தர்கள் திரளாக தரிசனம்!வேலூர் மார்ச் 16-வேலூர் அடுத்த புது வசூரில் தீர்த்தகிரி ஸ்ரீவடிவேல் சுப்பிரமணியர் கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட முருகர் சிலை அமைந்துள்ள மூன்றாவது கோயிலாகும். இந்த கோயிலில் வார இறுதி நாளும், விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் திரளாக வருகை தந்து ஸ்ரீ வடிவேல் சுப்பிரமணியரை குடும்பத்துடன் தரிசித்து சென்றனர்.