செய்யாறு, மார்ச் 16 –
அமைச்சர் எ.வ.வேலு பிறந்தநாளை முன்னிட்டு வெம்பாக்கம் தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றியம் சார்பில், மாங்கால் கூட்டுரோட்டில் உள்ள ‘சமுதாய நலக் கல்வி மையம் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் ஆலோசனை மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ‘கேக்’ வெட்டி மதிய உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களின் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பிறந்தநாள் விழா வெம்பாக்கம் தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக துணைத் தலைவர் ஏழாச்சேரி எம்.கே.கார்த்திகேயன் ஆகியோரது ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது.
செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டு ரோட்டில் ‘ரூரல் எய்ட் ஐக்கிய
வளமனை – சமுதாய நலக் கல்வி மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை மையம்’ இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 97 மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த மையத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் சி.கே.ரவிக்குமார், தினகரன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் கலைஞர் பாஸ்கரன் உள்ளிட்ட தி.மு.க., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Leave a Reply