வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காட்பாடியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்து செயல் விளக்கம்!

வேலூர்,மார்ச் 14-
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர். பிரதாப் குமார் , சுகாதார அலுவலர் டாக்டர். சிவக்குமார் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்தும் ,செயல்படுத்தும் விதங்கள் குறித்தும் விளக்கம் அளித்து தெரிவிக்கப்பட்டது.  காட்பாடி மண்டலம் 1ல் தினமும் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்த செயல் விளக்கத்தை 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் நேரில் பார்த்து பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேரில்  பார்த்து தெரிந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர். சிவக்குமார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது