

சென்னை பாடி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருகில் உள்ள மீனாட்சி சுந்தரர் திருமண்டபத்தில் உலக மகளிர் தின பட்டிமன்றம் “பெண்களை பேணிப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஆண்களா? பெண்களா??என்ற தலைப்பில் நடைபெற்றது. சின்னத்திரை புகழ் டாக்டர் சி. தமிழ்ச்செல்வன் நடுவராக இருந்து பட்டிமன்றம் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
பெண்களே! என்ற அணியில் பேராசிரியர் த. அன்பு, முனைவர் ப. பாக்யலடசுமி ஆகியோர் வாதிட்டனர். ஆண்களே! என்ற அணியில் டாக்டர் ராஜலெட்சுமி இளங்கோ, கவிஞர் மெகருன்னிஷா ஆகியோர் வாதிட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழே முழங்கு இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அ. சே. செந்தில் குமார் சிறப்புடன் செய்திருந்தார்.










Leave a Reply