மாவட்ட நியமன அலுவலர் அனுராதா அறிவுரை

அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேசன் சார்பில் மகளிர் தின விழா கோவை கோ இந்தியா அரங்கில் நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சரவண பிரியா ,
பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.
விழாவில் உணவுத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா விருதுகள் வழங்கி பேசுகையில்,
வீட்டு வேலைகள்,
கணவர்,
குழந்தைகள் என பெண்கள் அதிக அக்கறை காட்டுவது நல்லது தான். ஆனால் அவர்களின் உடல் நலத்தையும் பேணிக் காக்க வேண்டும் .
மேலும்,வீட்டு
சமையலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதில் மட்டுமே ஆரோக்கியம் நிரம்ப உண்டு. வெளியில் வாங்கும் உணவு பதார்த்தங்களில்ல கண்ணுக்குத் தெரியாத கலப்படங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க துறை சார்பில் தினமும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
பள்ளி முதல்வர் செண்பகவல்லி, காவல் துறை அலுவலர் ஸ்ரீலேகா உள்ளிட்ட 10 பெண்களுக்கு விருது வழங்கி கௌரவி க்கப்பட்டனர் .
விழாவில் ஈசன் கலைக்கூட குழுவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் நிர்வாகிகள் ஜெயேந்திரா ராவணன், மாணிக்கவாசகம், விஷால்,
பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .










Leave a Reply