வேலூர், மார்ச் 8-
வேலூர் காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப் பள்ளியின் 23வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் வி.பழனி வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை த.கனகா ஆண்டறிகை சமர்த்து பேசினார்.
பரிசு சான்றிதழ் வழங்கி சிறப்புரை
ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கோ.பழனி, இராணிப்பேட்டை மாவட்ட நல அலுவலர் பி.சுமதி ஆகியோர் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினர்.
வாழ்த்துரை
கவிஞர் ஆர்.சீனிவாசன், அறிவுத்தோட்டம் மற்றும் மக்கள் நலச்சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன், அறங்காவலர்கள் கே.குணசுந்தரி, மனோகரி சுவாமிநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர் மு.சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
பள்ளி மாணவர்களின் மாறுவேட போட்டி, இசை, நடனம், நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றது. பள்ளி ஆசிரியைகள் சே.சித்ரா, சு.மலர்கொடி, வெ.பாரதி, தணிகைசெல்வம், கோரந்தாங்கல் உதவி அஞ்சலக அலுவலர் வெ.கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் உதவி தலைமையாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்.











Leave a Reply