உலக மகளிர் தின விழா: வேலூர் யூனியன் வங்கியில் கண் பரிசோதனை முகாம்!

வேலூர், மார்ச் 8-
யூனியன் வங்கி காஞ்சிபுரம் பிராந்திய தலைவர்  இளஞ்செழியனின் அறிவுறுத்தலின்படி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் யூனியன் வங்கி சார்பில்  நலம் மருத்துவமனை மற்றும்  DR. அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாமை  யூனியன் வங்கி வேலூர் கிளையில் நடத்தியது.
இந்த முகாமை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்(கிளை மேலாளர், சத்துவச்சாரி) மற்றும்   ராஜேஷ் கன்னா (கிளை மேலாளர், வேலூர்) தலைமையில் தொடங்கி வைத்தனர்.
பிரதீபன்(கிளை மேலாளர், வஞ்சூர்) மற்றும் வெங்கடேஷ்(கிளை மேலாளர்,அடுக்கம்பாறை) உடன் இருந்தனர்.
இந்த முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலனடைந்தனர்.